Saturday, May 9, 2009

நீ தமிழனா……..

அன்புக்குரிய வாசகர்களே…..

 

அண்ணே…என்ன எழுத அதை எப்படி எழுத…என்னால முடியல …என் இனம் ஒவ்வொரு நிமிடமும் மடிந்து கொண்டிருக்கிறது….என் கண்களில் அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது….இன்னும் நம்மில் பலரும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்….ஆனாலும் விடிவு இல்லையே……

ஏன்….?ஏன்…..?

 

நான் USல யிருக்கேன்ண்ணே….இப்ப இங்க பன்னி காய்ச்சல் பரவுகிறது…முதல இதுக்கு மருந்து கிடையாது மரணம்தான் சொல்லிட்டாங்க…கொஞ்ச பேர் இறந்தும் போயிட்டாங்க…..இந்த மாதிரி செய்தியை கேட்டதும் எங்க்குள் முதன் முதலில் எனக்கு மரண பயம்வந்ததே பாருங்க….என்னதான்  ஈழதமிழருக்கான போராட்டல கலந்து கிட்டாலும் மரணபயத்தை நான் நல்ல உணர்ந்தேன்ண்ணே……என் தமிழருக்காக முழுமூச்சா இறங்க ஆரம்பிச்சிட்டேன்……

 

இப்ப நான் தமிழச்சி… அப்ப நீங்க…

 

தமிழன் முத்துகுமார் மரணத்துக்கு ஒரு அர்த்தம் கிடைக்க,சீமான் போன்றோர் சிறைக்கு சென்றதுக்கு ,மகளிரி உண்ணாவிரத்த்திற்க்கு,

தமிழன் மானஸ்த்தன் என்பதற்க்கு…..

 

நமக்கு கிடைத்த ஒரே  வாய்ப்பு ஓட்டுரிமைதான் …நீ தமிழன் என்றால் ஓட்ட பாத்து போடுங்க….

 

இந்த பதிவு பிடித்தால் ஓட்ட போட்டு கருத்தை சொல்லுங்க…..

    

 

பெண்களில் இரண்டு ரகம் உண்டு

பெண்களை அலங்காரப் பிரியர்கள் என்று சொல்வதுண்டு. அலங்காரம் செய்து கொள்வதில் பெண்கள் அதிக நேரம் ஒதுக்குவார்கள் என்பதும் உண்மைதான்.

தான் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெண்களிடமும் இருக்கவே செய்கிறது.

இதில் இரண்டு வகையான பெண்கள் இருக்கிறார்கள். தான் போட்டிருக்கும் அல‌ங்கார‌ம் வெளியே தெரியவேக் கூடாது என்று அழகு செய்து கொள்பவர்கள் ஒரு ரகம். 

பளிச்சென அழகு தர வேண்டுமென்பதற்காக அழகுப்படுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம்.

இதில் பளிச் ரகத்தினர் மிக எளிதாக ஆண்களுடன் பழகுபவர்களாக இருப்பார்கள்.

மிகவும் மென்மையாக அழகுப்படுத்திக் கொள்பவர்கள் ஆ‌ண்க‌ளிட‌ம் பழகுவதற்கு தயங்குபவர்களாஇரு‌ப்பா‌ர்க‌ள்.

இதில் முதல் ரகப் பெண்களிடம் ஆண்கள் உரிமையுடனும், சகஜமாகவும் பேசுவார்கள். பழகுவார்கள். உ‌ண்மைதா‌ன். 

ஆனால் தனக்குப் பிடித்த பெண் என்று வரும்போது, கண்டிப்பாக மென்மையாக அழகுப்படுத்திக் கொள்பவளைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்.

அதிகமாக அழகுப்படுத்திக் கொள்ளும் பெண், சுதந்திர விரும்பியாகவும், மிகத் தைரியமானவளாகவும், போராடத் தயங்காதவளாகவும் இருப்பார்கள். இவை யாவும் பெண்ணுக்குத் தேவையான குணங்கள் என்ற போதிலும், இதனை பெரும்பாலும் ஆண்கள் விரும்புவதில்லை.

அடுத்ததாக, அனைவரையும் கவரக் கூடிய அழகுடன் மிளிரும் இந்த பெண்ணுக்கு தான் தகுதியானவன் இல்லை என நினைத்தும் ஆண்கள் ஒதுங்கிவிடுவார்கள்.

இயற்கையான அழகுடன் மிளிரும் பெண்ணைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறது. ஆனால் இயற்கை அழகைத்தானே ஆண்கள் விரும்புகிறார்கள் என்று தனது ஆடை, சிகை அலங்காரத்தில் அலட்சியமாக இருப்பதையும் ஆண்கள் விரும்ப மாட்டார்கள்.

ஒரு ஆணை காதலிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், முதலில் ஆடை, அலங்கார விஷயங்களில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த கட்டுரையைப் படித்ததும், ஓர் ஆணிற்காக நான் ஏன் மாற வேண்டும், ஆணின் இஷ்டப்படி எல்லாம் நான் என்னை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எல்லாம் காதலுக்கு பொருந்தாது.

உங்கள் விருப்பங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, காதலரின் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் காதலுக்கு அழகு. பின் உங்கள் விருப்பத்திற்கு அவர் முழு சுதந்திரம் தருவார். அவருக்கு நீங்கள் முழு சுதந்திரம் தருவீர்கள். அப்போது காதல் என்பது நினைக்க நினைக்க இனிக்கும் அற்புத விஷயமாக இருக்கும்.

Thursday, May 7, 2009

அழகு ஆபத்தானதா?

அழகு என்று படித்தவுடன், இந்தத் தொகுப்பு அழகானவர்களுக்கு என எண்ணிவிட வேண்டாம். அழகினால் ஏற்படும் ஆபத்து என்று ஆபத்தைப் பற்றி அச்சப்படுபவர்களுக்குத்தான் இந்த விஷயத்தைச் சொல்ல விரும்புகிறோம்.

பைபிள்ல இதுக்கு ஒரு கதை இருக்கு கேளுங்க.......

அதாவது சாராள் என்பவள் ஆபிரகாமின் மனைவி. ஆபிரகாம் தன்னுடைய சொந்த தேசத்தை விட்டு புதிய தேசத்தில் குடியேறினான். அவனுக்குள் அந்த தேசத்து மக்களை குறித்த பயம் எழுந்தது. ஏனென்றால் சாராள் மிகுந்த சவுந்தரியமும், அழகும் நிறைந்தவள். அவளுடைய அழகின் நிமித்தம் எங்கே ஆபிரகாமை கொன்று விடுவார்களோ என்ற பயத்தினால் தன் மனைவியை சகோதரி என்று மற்றவர்களிடம் கூறினான்.


சாராள் எல்லாக் காரியத்தையும் தேவனிடம் சொல்லி ஜெபிக்கும் பழக்கத்தை உடையவள்.

ஆபிரகாம் பயந்தது போலவே நேரிட்டது. அந்த தேசத்தின் ராஜா, ஆள் அனுப்பி சாராளை அழைப்பித்தான். சாராள் தொடர்ந்து ஜெபித்தபடியே சென்றாள். 

தேவன் இரவிலே ராஜாவை எச்சரித்தபடியால் சாராளுக்கு ஒர தீங்கும் செய்யாமல் அவளை அனுப்பிவிட்டான்.

மேற்கூறிய கதையில் ஓர் உண்மைக் கூற்று புதைந்திருப்பதைக் காணலாம்.

அதாவது நடக்காத ஓர் அசம்பாவிதமான காரியத்தை நினைத்து நினைத்து பயப்படுவதை விட்டுவிடுங்கள். ஏனென்றால் நாம் பயப்படுவது நமக்கு வந்து நேரிடும்.

பயத்தை புறம்பே தள்ளிவிட்டு கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள்.

ஆபிரகாமையும் சாராளையும் காத்த தேவன் எல்லோரையும் சகல பயங்களில் இருந்து விடுவிப்பார். 

எதிர்த்து நிற்பது நாட்டின் ராஜாவே ஆனாலும் சரி நம்மை விடுவிக்க ராஜாவையே ஆளுகிற தேவன் உண்டு என்பதை மறக்கக் கூடாது.

எனவே அழகு ஆபத்து இல்லைங்க....

Monday, May 4, 2009

ஸ்வைன் ப்ளூ:3 வாரத்தில் தடுப்பூசி 'ரெடி?

 ஸ்வைன் ப்ளூ காய்ச்சலை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இங்கிலாந்து நிறுவனம் இறங்கியுள்ளது. முதல் தடுப்பூசி இன்னும் மூன்று வாரங்களில் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் 
உலகம் முழுவதும் மக்களை பீதியடைய செய்து வருகிறது. இதையடுத்து இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இந்த வரிசையில் தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகளும் கால்வைத்துள்ளனர்.

ஸ்வைன் ப்ளூவுக்கு காரணமான H1N1 வைரஸ் அடிப்படையில் இரண்டு புரோதங்களால் ஆனது. அவற்றில் ஒன்று H எனப்படும் ஹேமக்குளேட்டனின் மற்றொன்று N எனப்படும் நியூராமினிடேஸ் என்ற புரதமாகும். அந்த வைரசின் பெயரில் இருக்கும் எண்கள் அதன் வகையை குறிக்கிறது.

இங்கிலாந்தின் ஹெர்ட்போர்டுஷையர் நகரில் இருக்கும் தேசிய உயிரியல் தரக்கட்டுபாடு நிறுவனத்தை சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் தற்போது அதிவேகமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் கோழி முட்டைக்குள் லேசான துளைபோட்டு அதில் இந்த ப்ளூ வைரசை வளர்க்க திட்டமி்ட்டுள்ளனர். 

இது குறித்து ஜான் வுட் என்ற விஞ்ஞானி கூறுகையில், வைரஸ்கள் வளர்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் கோழி முட்டைக்குள் இருக்கிறது. அவை வைரஸ் தொழிற்சாலைகள் என்றார். 

இந்நிலையில் விஞ்ஞானிகள் முட்டையில் துளைபோட்டு அதில் ஸ்வைன் ப்ளூ வைரசை போட்டு அவற்றை வளர செய்கின்றனர். பின்னர் அவர்கள் இரண்டு தொழில்நுட்பங்களின் மூலம் தடுப்பூசி தயாரிக்க உள்ளனர். முதல் தொழில்நுட்பத்துக்கு ரிவர்ஸ் ஜெனிடிக்ஸ் என்று பெயர்.

இதில் H மற்றும் N புரோதங்களை தனியாக பிரித்து, அவற்றை PR8 என்ற வைரசின் உதவியுடன் மீண்டும் இணைக்கின்றனர். அப்போது கிடைக்கும் நோய் தன்மையற்ற ஒட்டு வைரஸ் மூலம் மருந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

மற்றொரு முறையில் H1N1 மற்றும் PR8 இரண்டையும் ஒரே சமயத்தில் முட்டைக்குள் போட்டு, அவற்றை இயற்கை வழியில் ஜீன் மாற்றம் அடைய செய்து, அதன் மூலம் உருவாகும் புதிய ஒட்டு வைரசிலிருந்து மருந்து தயாரிக்க இருக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சி விரைவில் முடிந்து இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் புதிய தடுப்பூசி தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இவற்றை பெரிய அளவில் தயாரிக்க நான்கு முதல் ஐந்து மாதங்கள் கூடுதலாக தேவைப்படும் என கூறப்படுகிறது.

Saturday, May 2, 2009

படித்ததில் பிடித்தது

சிக்கனமே சிறந்ததுText Color

 

அமெரிக்காவின் ராக்பெல்லர் உலகப் பணக்காரர்களில் ஒருவர். ஒரு நாள் ராக்பெல்லரை பார்த்து தங்களது பள்ளிக்காக நன்கொடை வாங்க ஒரு மாணவர் குழுவினர் வந்திருந்தனர்.

ராக்பெல்லரின் வீடு இரவு நேரத்தில், சில விளக்குகளின் உதவியோடு சற்று இருட்டாகவே இருந்தது.

ராக்பெல்லர் ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்துக் கொண்டு மங்கலான ஒளியில் படித்துக் கொண்டிருந்தார்.

உள்ளே வந்த மாணவர்கள், இவரே இப்படி கஞ்சப்பிசினாரியாக உள்ளாரே, இவரா நமது பள்ளி கட்ட நன்கொடைத் தரப் போகிறார். வேண்டாம், இப்படியே திரும்பிப் போய்விடலாம் என்று கூட எண்ணினர்.

அப்போது, எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று ராக்பெல்லர் கேட்டார்.

கல்லூரியில் வகுப்பறை இல்லாமல் கஷ்டப்படுகிறோம், அதற்கு சுமார் 3 லட்சம் டாலர் செலவாகும். தாங்கள் ஒரு 500 டாலர் நன்கொடை கொடுத்தால் கூட நன்றாக இருக்கும் என்று மாணவர்கள் நம்பிக்கையே இல்லாமல் கேட்டனர்.

இதைக் கேட்ட ராக்பெல்லர் 3 லட்சம் டாலரையும் ஒரே செக்கில் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

"
நான் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் உங்களுக்கு இந்த உதவியை செய்திருக்க முடியாது" என்று கூறினார்.

அவரது அடக்கமான பேச்சும், எளிமையும் அவரை செல்வந்தராக உயர்த்தி இருக்கும் என்பதை புரிந்து கொண்டவர்களாய் மாணவர்கள் வெளியே வந்தனர்.

Friday, May 1, 2009

யார் விட்டுக் கொடுக்க...

அன்புக்குரிய வாசகர்களே...

இந்த  பதிவில் நான் படித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்...

ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார். 

அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் வாசகர்களே...பிடித்தால் ஓட்டு போடுங்க…