ஆம், நிலம்பூர் கிராமத்தில் வரதட்சணைக் கொடுமை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக அங்கு வரதட்சணையற்ற திருமணங்கள் அதிகளவில் நடந்து வருகிறது.
திருமணமங்கள் என்பது சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்ட காலம் மாறி ரொக்கத்திலும், சவரனிலும் நிர்ணயிக்கப்படும் காலமாகிவிட்டது. வரதட்சணை கொடுக்க முடியாத காரணத்தால் எத்தனையோ கன்னிகள் முதிர் கன்னிகளாகிவிட்டனர்.
இந்த வரதட்சணைக் கொடுமை இந்தியாவின் பல நகரங்களிலும் தலை விரித்தாடுகிறது. அதிலும் கேரளாவில் இது அதிகம். இதற்கெல்லாம் எங்கு வழி பிறக்கப் போகிறது என்றுதான் பல பெற்றோர்களும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
வழி பிறந்துள்ளது நிலம்பூர் கிராமத்தில்.
முதலில் சொந்தமாக வீடில்லாமல் வாழ்பவர்களை கண்டறிந்தார். அவர்கள் ஏன் சொந்தமாக வீடில்லாமல் வாழ்கிறார்கள் என்பதை ஆராய்ந்த போது, பலரும், தங்களது மகள் திருமணத்திற்காக சொந்த வீட்டை விற்று வரதட்சணை வழங்கியிருப்பது தெரிய வந்தது.
வரதட்சணை பிரச்சினை இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்திருப்பது குறித்து கவலைப்பட்டார். கவலைப்பட்டதோடு நின்றுவிடாமல், அதனை மாற்ற நடவடிக்கையும் எடுத்தார். வரதட்சணையை ஒழிக்கும் நோக்கத்தோடு ஒரு குழுவை அமைத்தார்.
இந்த குழுவினர், வீடு வீடாகச் சென்று வரதட்சணைக் கொடுமையால் பல குடும்பங்கள் சீரழிந்து கிடப்பதை எடுத்துக் கூறி, அதனால் எத்தனை பெண்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதையும் பட்டியலிட்டனர்.
இதோடு நின்றுவிடாமல் வரதட்சணை விழிப்புணர்வை ஏற்படுத்தும் தெருக் கூத்துகள், திரைப்பங்கள் காட்டப்பட்டன.
முதலில் இதற்கெல்லாம் எந்த பலனும் இல்லாமல் இருந்தது. ஆனால் நாளடைவில் மக்களின் மனதில் சிந்தனை ஓடியது. விழிப்புணர்வு ஏற்பட்டது. அப்படி விழிப்புணர்வை அடைந்த மக்களிடம், வரதட்சணை வாங்க மாட்டோம், கொடுக்கவும் மாட்டோம் என்று உறுதி மொழியும் வாங்கப்பட்டது.
அப்போதே அந்த கிராமத்தில் வரதட்சணை என்ற பேய் ஓடோடிவிட்டது.
நிலம்பூர் கிராமத்திற்கு ஒரு விடிவெள்ளி தோன்றியது போல இந்தியாவிற்கும் ஒரு விடிவெள்ளி தோன்றினால் பல பெண்களின் வாழ்க்கை விடியும் என்பது உறுதி.
தகவலுக்கு நன்றி
ReplyDeleteதிருமணத்திற்கு முன்பு 498ஏ என்னும் வரதட்சணை கொடுமை சட்டம், குடும்ப வண்முறை சட்டம் (D V
ReplyDeletecase)போன்றவற்றை தெரிந்து வைத்துக்கொள்ள சொல்லுங்கள்... மற்றும் அரசியல் வாதி மகளாக இருந்தால் முன்
ஜாமின் (AB) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்... இது எல்லாம் நகைச்சுவைக்கக எழுதுவது அல்ல...
தற்பொழுது சிறுசிறு குடும்பத்தில் ஏற்படும் சலசலப்புக்கெல்லம் இதபோல் சட்டங்கள் மணமகன் வீட்டாரின்
மீதுப்போடப்படுகின்றன... இதுவரைக்கும் சுமார் 1,50,000 ஆயிரம் பெண்கள் (எனது தாயர் மற்றும் எனது தம்பி
நண்பருடைய தாயர் உட்பட) விசாரணைக்கைதிகளாக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்... மற்றும் சுமார் வருடத்திற்கு
20,000 குழந்தைகள் தந்தையில்லாமல் வளர்கின்றது (எனது குழந்தை உட்பட)
வருமுன் காப்போம்...
அன்புடன்,
தமிழ். சரவணன்
தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இந்த மாதிரியான விழிப்புணர்வுகள் நாடெங்கும் ஏற்பட வேண்டும்.
ReplyDeleteதமிழ் சரவணன் அவர்கள் சொல்வது மிக மிக உண்மையான விஷயம். வளர்ந்து வரும் இப்படிப்பட்ட விஷயங்களை வேரறுக்க வேண்டும். 498 அ வை நீக்க வேண்டும்.
நல்ல இருக்கு நண்பரே..!
ReplyDelete