இது என்னுடைய முதல் பதிவுங்க.குடும்பத்தில உள்ள பெண்களுக்கு கொஞ்சம் பயன்படுமுன்னு நினைக்கிறேன்.ஏதோ நம்மால முடிஞ்சது….
இதோ சில டிப்ஸ்….
இல்லறமே நல்லறங்கது நமக்குத் தெரியும்.ஆனாலும் எனக்கு போன வாரம் நடந்த நீயா நானா நிகழ்ச்சித்தான் இந்த தலைப்பை பத்தி எழுத தூண்டியது.காரணம் அதில நம்ம மாதிரி பெண்கள் அவுங்க மனசிலயிருக்கிறதைப் பளிச்சுன்னு கொட்டிடாங்க. நம்ம இனத்தை பத்தி நமக்குத்தானே தெரியும்.அந்த காலத்தில் இருந்து இப்பவரைக்கும் பெண்ணுக்கான இலக்கணத்தை வகுத்ததே ஆண்கள்தானே.. அதனால அவுங்களுக்கு நம்மள பத்தி சரிவர தெரியவும் தெரியாது , நம்ம மனச புரியவும் புரியாது. ஏன்ன்னு கேளுங்க…
என்னை பொருத்தவரை பெண் ஒரு ஆழ்கடல். அவள் அழகும்,வளமும் ,பொறுமையும்,எதையும் தாங்கும் வலிமையும் கொண்டதாக இறைவன் படைத்துவிட்டான்.நதியும் பெண்ணும் ஒன்னுதான்.
ஏன்னா நம்ம இயற்க்கையிலுள்ளவற்றை அப்படியேத்தான் ஏத்துக்கனும்.மல்லிகைன்னா மணம் வீசத்தான் செய்யும் பொத்தி வைத்தாலும். சிங்கமுன்னா சீறத்தான் செய்யும் வீட்டில வளத்தாலும்.என்னடா இவ ஆண்களுக்கு சப்போட் பண்றான்னு நினைக்காதிங்க..அதான் சொன்னேன்ல இயற்கையை மாத்த முடியாதுன்னு.ஆனா அன்பால முடியாதது ஒன்னுமில்லைங்க.
இப்ப பாய்ண்டுக்கு வரறேன்…ஒரு பெண்ணு மனசு இன்னோரு பெண்ணுக்கு புரியும் ஆனா முழுமையா அறிய முடியாது.இப்படி இருக்கப்ப ஆண்களுக்கு தெரிய வாயப்பில்லை.ஆனா ஒவ்வொரு மனைவிக்கும் நம்ம மனச புரிஞ்சி நம்ம கணவன் நடக்கன்னும்தான் ஆசை. நமக்குதான் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளக்ககூடியத்தன்மை உண்டுன்னு அறிவியல் சொல்லுது.அதனால நம்ம விருப்பு வெறுப்புகளை நம்மே சொல்லிர வேண்டியதுதான் .
நம்ம என்னதான் மாடர்ன் வேல்டுல வாழ்ந்தாலும் ஒரு குறுகிய வட்டத்திலதான் இருக்கோம்.வாழ்க்கையப் பத்தி நமக்கு தொலைதூரப் பார்வை அவசியம்.
எத கொடுத்தாலும் சந்தோசம் வராது ஆனா விட்டுக்கொடுத்தா கண்டிப்பா வருமுங்க.நம்ம சுயமரியாதைக்கு பங்கம் வராதவரை விட்டுக்கொடுத்து போகலாமுங்க.
எல்லாத்துக்கும் மேல ஒவ்வொரு மனுசனுக்கும் வாழ்க்கையை ”positive angle”ல பார்க்கத் தெரிஞ்சா போதுமுங்க.என்ன நான் சொல்லுறது…..
உங்களுக்கு பிடிச்சா ஓட்டு போட்டு கருத்த சொல்லிருங்கோ……..
No comments:
Post a Comment