பொதுவாக எண்ணெயில் பொறித்த உணவுப் பொருட்களும், சிப்ஸ் வகைகளும் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியவை என்பதை அறிந்துள்ளோம்.
ஆனால் தற்போது சிப்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோயைத் தடுக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சிப்ஸில் விட்டமின் - சி சத்து அதிகம் உள்ளதால், உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயைத் தடுப்பதில், சிப்ஸ் முக்கியப் பங்கு வகிப்பதாக லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.
புற்றுநோய் செல்கள் வளர்வதை இந்த வைட்டமினில் உள்ள சத்துகள் தடுப்பதாக அந்த அறிக்கையை மேற்கோள்காட்டி டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அளவு திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின்- சி சத்தைக் காட்டிலும், ஓரளவு சிப்ஸில் 3 மடங்கு அதிக சத்து உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளானவர்கள் அதிக வைட்டமின் சி சத்துள்ளவற்றை உண்பதால், நோயின் தன்மை குறையும் என்றும், அதற்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் மிகச் சிறந்தது என்றும் தெரிய வந்துள்ளது.
வைட்டமின் சி சத்துள்ள உணவுப் பொருட்களை உண்பதால் சில வகை புற்றுநோயில் இருந்து தப்பலாம் என்றும், அதுபோன்ற உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து குறைவு என்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஃபியானா ஹன்டர் தெரிவித்துள்ளார்.
வயிறு மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி அளவைக் காட்டிலும் 175 கிராம் சிப்ஸில் 3 மடங்கு அதிக சத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விட்டமின் பி1, பி-6, நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்துகளும் சிப்ஸில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே சிப்ஸூம் ஆரோக்கியமான உணவு வகைகளிலே அடங்கும் என்று தெரிய வந்துள்ளது.
நல்ல தகவல் பாராட்டுக்கள். ஆயினும் அதிக வெட்பத்தில் விட்டமின் சி சிதைந்துவிடும் எனவே நான் நினைக்கிறேன்.
ReplyDeleteரொம்ப அருமையான தகவல்,
ReplyDelete