இது என்ன உலகமடா சாமி…இந்த உலகத்தில நல்லதுக்கு காலமேயில்லைங்க….நம்ம எல்லாருக்கும் சேவையை பற்றி நல்லாவே தெரியும்….என்னா நம்ம எல்லாருமே சேவை செய்யுறோம்….எப்படிங்கிறிங்களா….இதோ…
நம்ம எல்லாரும் நம்ம கடமையை ஓழுங்க செய்யும்போதுங்க…ஒரு நல்ல மனைவியா,ஒரு நல்ல கணவனாய்,ஒரு நல்ல தாயா,நல்ல மருமகளாய் நம்ம இருக்கும்போதுதாங்க…எப்படின்னா…இப்படினம்ம இருக்கும்போது நம்ம நாட்டில குழந்தை காப்பங்களும்,முதியோர் இல்லங்களும் தேவையேபடாதுங்க..இதையெல்லாம் தாண்டி இந்த உலகத்தில டாக்டசும் ,நர்ஸ்சும் மனித உயிர்களை காப்பாத்துறாங்க…
இதுல இந்த டாக்டருக்கு கொடுக்க வேண்டிய பீஸையும் ,தாங்க்சையும் சொல்லி விடுகிறோம்…ஆனால்…
இந்த நர்ஸ்கள் எந்த அருவருப்பையும் பார்க்காமல் நம்மள துக்கி துடைத்து சுத்தம்பண்ணி பாக்குறாங்க…கடைசில ஒரு நன்றி கூட நம்மில் சிலர் சொல்லுறதுயில்லை….போனவாரம் நடந்த இனி ஒரு விதி செய்வோமில் நர்சுகளின் பங்களிப்பும்,குடும்பம் ,சமூக மற்றும் மிடியாக்களில் அவர்களின் நிலைக்குறித்து பேசப்பட்டது.அதுவே என்னை இப்பதிவினை எழுதத்தூண்டியது.இப்போது மிடியாக்களிலும் ,சினிமாவிலும் சிரிக்க வைக்கிறோம் என்றபெயரில் நர்ஸ்சுகளின் சேவையை மறக்கும் படியாக மக்களின் சிந்தனைகளை திசைதிருப்புகிறார்கள்(காமெடி என்றபெயரால்)….
என்னை பொறுத்தவரை பிறரின் மனசை புண்படுத்தும் எந்த ஒரு சுவையும் நகைச்சுவையாகாது…இதுவே உங்க கருத்து என்றால் ஓட்டுபோட்டு கருத்தை சொல்லுங்கோ….
No comments:
Post a Comment